ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை!!

Read Time:2 Minute, 7 Second

a69cf391-6951-4cac-a75d-adb81496220d_S_secvpfஒடிசாவில் நரபலி வழக்கில் 30 வயது மந்திரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிதாம்பர் கெய்பெய். தன்னை யோகசக்தி வாய்ந்த தாந்திரீகவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் மந்திர தந்திர வேலைகள் செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு 8 வயது சிறுவனை நைசாகப் பேசி சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுவனை நரபலி கொடுத்து பூஜை செய்துள்ளார்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மந்திரவாதி பிதாம்பர் இந்த படுபாதக செயலைச் செய்தது தெரியவந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சிறுவனின் தலையை தோண்டி எடுத்த போலீசார், உடலை வேறு ஒரு இடத்தில் உள்ள சாக்கடையில் இருந்து எடுத்தனர்.

மந்திரவாதி பிதாம்பர் கைது செய்யப்பட்டு ஜாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசுத் தரப்பு வாதங்கள், 22 சாட்சிகளிடம் விசாரணை என 15 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுவனின் தலையை அறுத்துக் கொன்ற குற்றவாளி பிதாம்பருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி ஜீவன் பாலவ் தாஸ் தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!!
Next post நடிகைகளின் படங்கள் பல!!