பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்!!

Read Time:1 Minute, 30 Second

1924336445Bandulaலிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆதாரமற்ற அறிக்கை காரணமாக லிட்ரோ நிறுவனம் மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட தனக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் சலில முணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22 ம் திகதி அல்லது அந்த காலப்பகுதியில் பந்துல குணவர்தன இவ்வாறானதொரு கருத்தை வௌியிட்டிருந்தார்.

அதன்படி எதிர்வரும் 7 நாட்களுக்குள் குறித்த தொகைப் பணத்தை செலுத்த தவறுமிடத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமது சட்டத்தரணியூடாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெலே சுதாவுடன் தொடர்புபட்ட இந்த முக்கிய நபர்களை கைது செய்ய உதவுங்கள்!!
Next post பாலியல் குற்றச்சாட்டில் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு 12 வருட சிறை!!