திருச்சூர் அருகே பெற்றோருடன் பஸ்சில் சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கண்டக்டர் கைது!!

Read Time:3 Minute, 0 Second

748e0db6-1bdc-4fd5-8a63-d3c19b53d73a_S_secvpfதிருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

3 பேர் அமரும் இருக்கையில் தாய், தந்தை, ஒரு மகள் அமர்ந்து கொண்டனர். 17 வயதான இன்னொரு மகள் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அந்த பஸ் அதிகாலை 5 மணி அளவில் குன்னங்குளம் அருகில் வந்தபோது அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த காஞ்சிராங்குளத்தை சேர்ந்த சுனில்குமார் (வயது 38). என்பவர் தனியாக அமர்ந்து இருந்த அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டு பஸ் நிறுத்தப்பட்டது. நடந்த சம்பவத்தை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கண்டக்டரை கண்டித்தனர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை மற்ற பயணிகளும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை. இதனால் மனவேதனையுடன் அந்த குடும்பம் பஸ்சில் இருந்து கீழே இறங்கியது.

அவர்கள் குன்னங்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த கொடுமையை கூறி புகார் தெரிவித்தனர். உடனே போலீசார் தங்கள் ஜீப்பில் அந்த பஸ்சை விரட்டி சென்றனர். அதற்குள் அந்த பஸ் குன்னங்குளம் பஸ்நிலையத்திற்குள் சென்றுவிட்டது.

போலீசை பார்த்ததும் கண்டக்டர் சுனில்குமார் பஸ்சில் இருந்து இறங்கி பஸ்நிலையத்திற்குள் ஓடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

இதை பார்த்ததும் மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க முயன்றனர். உடனே போலீசார் அந்த கண்டக்டர் மீதான குற்றத்தை விளக்கி கூறியதும் பஸ் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட கண்டக்டர் சுனில்குமார் ஏற்கனவே 2011–ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் காமெடி: கற்பழிப்பு குற்றவாளி ஆசாராம் பாபு பாடப் புத்தகத்தில் புனிதராக சித்தரிப்பு!!
Next post பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி!!