யாழ் பல்கலை விடுதியில் சிங்கள முஸ்லீம் மாணவர் வெளியேற்றம் இதற்கு யார் காரணம்?

Read Time:4 Minute, 45 Second

unnamed (47)விடுதி வசதிகளை வழங்குவது குறித்து முடிவெடுப்பது நான் இதை கேட்பதற்கு நீங்கள் யார் என ஊடகவியலாளர்களை ஆவேசமாக பார்த்து கேள்வி எழுப்பினார் மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமார். இன்று காலை(02) ஊடக சந்திப்பு ஒன்று மருத்துவ பீட விடுதி மண்டபத்தில் நடைபெற்ற பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளிற்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இவ்ஊடக சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பீடாதிபதியிடம் திடிரென வெளிமாவட்ட மருத்துவ மாணவர்கள் பலர் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனரே இதற்கு என்ன காரணம் என வினவியபோது சற்றும் இந்த கேள்வியை எதிர்பாராத அவர் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கொண்டு வாரும் என வாய்ச்சவால் விட்டுள்ளார்.தொடர்ந்தும் இந்த விடயத்தை நான் தான் கையாள்கின்றேன்.தற்போது விடுதியில் உள்ளவர்கள் பிராடோ வாகனங்கள்,பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆனால் யாழில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தாலும் வசதி வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கையை எடுக்கின்றேன் என கூறினார். இதனை அடுத்து விடுதி வசதி என்பது இடத்தின் தூரம்,மற்றும் சில நியதிகளில் அடிப்படையில் தான் வழங்கப்படுகின்றனவே என கேட்டதற்கு நீங்கள் ஏன் இதில் தலைபோடுகின்றீர்கள் பாதிக்கப்பட்டவர்களை வரச்சொல்லுங்கள் என பதில் அளிக்கின்றார். எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களை இணங்காட்டினால் புள்ளிகளில் கைவைத்து விடுவார் என தெரிவிக்கின்றனர்.

இதுவும் ஒரு வகையில் உண்மை என எண்ணவே தோன்றுகின்றது. சிறுபிள்ளைத்தனமாக நடக்க முற்படும் இவர் மேற்கூறிய விடுதி வழங்கும் அடிப்படை காரணங்கள் ஏற்கக்கூடியதல்ல. வாகன வசதி,சிறிது பணப்புழக்கம் ஒரு மாணவனிடம் திடிரென வந்து விட்டால் இவரது கருத்துப்படி விடுதி வாய்ப்பு ரத்தாகி விடும். இவரது இந்த செயற்பாட்டினால் சிங்கள,முஸ்லீம் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலனறுவை,அனுராதபுரம்,மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை கண்டி போன்ற பிரதேசத்தில் இருந்து கல்வியை தொடரும் மாணவ மாணவிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குறித்த பாதிக்கப்பட்ட மாணவ அணியினரில் ஏனைய மாணவர்கள் பலருக்கு விடுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு அம்மாணவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது இவரது இச்செயற்பாட்டினால் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் சிங்கள ,முஸ்லீம் மாணவர்கள் தங்க வசதி இன்மையினால் கல்வியை இடைநடுவில் கைவிட்டு விட்டு வரவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ பீட விடுதிகளில் 360க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்று வரும் நிலையில் அதிகமான மாணவர்கள் இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டும் வெளிமாவட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் எவரும் இது தொடர்பாக தன்னுடன் தொடர்பு கொண்டு கதைக்கலாம் என பீடாதிபதி அவரது தொலைபெசி இலக்கத்தை0776514758 வழங்கியுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரின் தரப்பினர் இவரை தொடர்ப கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறுமுகன் தொண்டமான் யார் பக்கம் என்பதை தௌிவுபடுத்த வேண்டும்!!
Next post யாழில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்!!