புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஆதரவு!!

Read Time:2 Minute, 7 Second

d324fe33-37a4-4c51-8fc8-f707fa882c66_S_secvpfபுனேயில் போராட்டம் நடத்தி வரும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 50 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மர்டர் போன்ற பிரபல படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ் திரைப்பட கல்லூரி மாணவர்களின் போராட்டம் பற்றி கூறும் போது

”மாணவர்கள் ஒன்றும் தெரியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று நன்றாக புரிந்துக்கொண்டே செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது கோரிக்கைகள் காது கொடுத்துக்கேட்கப்பட வேண்டும். நாட்டில் பல கல்வி நிறுவனங்களின் தலைமை பதவிகளில் தவறான ஆட்கள் நியமிக்கப்படுவதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)!!
Next post போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீஸ்காரர்கள் கைது!!