வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன – ரவி!!

Read Time:1 Minute, 46 Second

1008580981Raviஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நிதி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோல்டன் கீ வைப்பாளர்களின் வைப்பு பணங்களை மீள வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் மக்கள் அவர்களின் கஷ்டங்களை எம்மிடம் எடுத்துக் கூறினர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதற்கான ஆலோசனைகளை எனக்கு வழங்கினார்கள்.

கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணங்களை மீள வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் எனக்கு கூறினர்.

அந்த ஆலோசனைக்கமைய நான் செயற்பட்டேன். இப்பொழுது நாம் தருவது அரசாங்கத்தின் பணம் அல்ல.

அந்த நிறுவனத்தின் சொத்து விபரங்களை தேடிப் பார்த்து பெற்றுக்கொண்ட பணம்தான் இது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளின் படங்கள் பல!!
Next post தேர்தல் சட்டங்களை மீறிய 115 பேர் கைது!!