ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய தம்பதியர்!!

Read Time:1 Minute, 49 Second

03588338-8b98-4004-bb70-b1df46f916d5_S_secvpfஉத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி, வீட்டுப்பணிப்பெண் மற்றும் அவரது 8 வயது மகனை தம்பதியர் இருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்ராவில் ஒரு ஆசிரியை வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு மாற்றுத்திறனாளி பெண் பணிபுரிந்து வந்தார். வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத போது பணிப்பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவ்வீட்டினுள் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருந்தது.

இதனை அறியாத அந்த பணிப்பெண், வீ்ட்டு சமையலறையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவுள்ள பால்பவுடரை தனது குழந்தைக்கு அளித்துள்ளார். பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அத்தம்பதியினர் சிசிடிவி கேரமா காட்சிகளை பார்த்து ஆவேசமடைந்து, இரும்புத் தடியால் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

பால்பவுடர் எடுத்த குற்றத்திற்காக ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது மகன் தாக்கப்பட்டது ஆக்ரா முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அத்தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் இருந்து வாகனத்திற்கான பெட்ரோல் தொகையை வசூலித்துச் சென்றது தான் வேதனையின் உச்சம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!
Next post இம்முறை தேர்தலில் அந்த அதிஸ்டத்தை பெறுவது மட்டக்களப்பு மாவட்டம்!!!