கோவையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி சாவு–கணவருக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:1 Minute, 28 Second

fb742a79-f626-47fa-a5d3-538fbd6386d7_S_secvpfகோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (30). லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரசேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்தது. இவர் மூலம் அவரது மனைவி சுமதிக்கும் பரவியது. இதனால் கணவன்–மனைவி 2 பேருமே பாதிக்கப்பட்டனர்.

இதற்காக அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனாலும் அவர்கள் மனவேதனை அடைந்தனர். எனவே கணவன்–மனைவி 2 பேரும் நேற்று இரவு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி இரவில் அவர்கள் சாணிபவுடரை குடித்து மயங்கினர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக இறந்தார். சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரூர் அருகே கணவனால் உயிரோடு எரிக்கப்பட்ட பெண் சாவு!!
Next post ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது!!