சாலைவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!!

Read Time:1 Minute, 35 Second

ec4a33b6-de89-43c1-8963-0f1d45e0888f_S_secvpfராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூரில் வசித்து வந்தவர் ராம் சிங். இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் ஆல்வார் மாவட்டத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பனியாலா என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ராம் சிங்கின் இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் படுகாயமடைந்த மூவரும் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்து–முஸ்லிம் காதலுக்கு எதிர்ப்பு: தாஜ்மகாலில் கழுத்தை அறுத்த காதல் ஜோடி!!
Next post 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது!!