மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!

Read Time:1 Minute, 42 Second

2129313466998119884courtham2மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் உபகுழு விசாரணை அறிக்கையை வெளியிட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக சபாநாயகரின் பணிப்பில் கோப் குழுவால் உபகுழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கையை சபாநாயகருக்கு வழங்கப்படும் முன் பகிரங்கப்படுத்துவது கருத்துக்களை வெளியிடுவது சட்டவிரோத செயல் என்பதால் அதனை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் குறித்த விசாரணை அறிக்கையை ஜூலை 23ம் திகதிவரை பகிரங்கப்படுத்தக் கூடாதென இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள கோப் குழு முன்னாள் தலைவர் டி.யு.குணசேகர உள்ளிட்டவர்களை 23ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் தீர்மானித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்!!
Next post ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி – இருவர் காயம்!!