பொலிஸ் அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம்!!

Read Time:1 Minute, 45 Second

1552086469policeகலவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம்முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 14ம் திகதி கலவான பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் நிலையம் வந்த அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஆக்ரோஷமான முறையில் நடந்துகொண்டதுடன் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இரத்தினபுரி நகருக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மராட்டிய மாநிலத்தில் நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது!!
Next post மேலாடை இன்றி வானவில் நீச்சலுடை (PHOTOS)!!