மராட்டிய மாநிலத்தில் நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது!!

Read Time:2 Minute, 51 Second

f5624070-7290-45e4-900b-6839fbc542a5_S_secvpfமும்பை புறநகரை சேர்ந்தவர், 21 வயதான மராத்தி பட நடிகை. இவர் ‘லஹன்பான்’ என்ற மராத்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது.

இந்த நிலையில் அந்த நடிகை தனது சம்பளத்துக்காக கடந்த 12-ந்தேதி, படத்தின் டைரக்டர் நண்பரை சென்று பார்த்தார். அவர், நடிகையை அவுரங்காபாத் நகரில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள பைத்தான் என்ற இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவரும், மேலும் 4 பேரும் சேர்ந்து அவரை கொடூரமாக கற்பழித்து விட்டனர்.

இது தொடர்பாக அவர் அவுரங்காபாத் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

டைரக்டர் ஆனந்த் மகாடே, ஒரு நடிகை வேண்டும் என தனது நண்பர் கோவிந்த் சிட்லாங்கேயிடம் கேட்டுள்ளார். சிட்லாங்கே என்னை அணுகினார். அதைத் தொடர்ந்து அவர்களது படத்தில் நான் நடித்து வந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அவுரங்காபாத் மாவட்டம், அம்பாத் கிராமத்தில் நடந்து வந்தது.

நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்லாங்கேயிடம் சம்பளம் கேட்டு போனேன். அவர் என்னை அவுரங்காபாத் அழைத்து சென்றார். அங்கிருந்து பின்னர் பைத்தானில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரும், மேலும் 4 பேரும் சேர்ந்து என்னை பலாத்காரம் செய்து விட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

இந்த புகாரின்பேரில், சிட்லாங்கே மற்றும் 4 பேர் மீது அவுரங்காபாத் குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிட்லாங்கே கைது செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே வழக்கு விசாரணை, அவுரங்காபாத்தில் இருந்து பைத்தான் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 58 வயதுக்காரரை மணந்த 20 வயது பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்!!
Next post பொலிஸ் அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம்!!