தவறான பாலியல் குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி மனிதனின் துயரக் கதை!!
ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த பட்டதாரியான கோபால் ஷெட்டி மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது. மற்றவர்களைப் போல முடிந்தவரை தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க கனவு கண்டார். ஆனால், தனது வாழ்க்கை விரைவில் நொறுங்கப் போகிறது என்று ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்.
29-7-2009 அன்று மும்பை போலீசார் கோபாலை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டது. துரிதகதியில் நடந்து முடிந்த விசாரணையில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அம்மாநில உயர்நீதிமன்றம். தண்டனை காலத்தை முடித்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி விடுதலையானார் கோபால்.
இந்த 7 ஆண்டுகளில் அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. அவர் அம்மா இறந்துவிட்டார், மனைவி மறுமணம் செய்துக்கொண்டார், பிள்ளைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டார்கள். சிறை அவருக்கு காச நோய்யை பரிசாக கொடுத்தது. சிறையில் இருந்தப்படி பெயில் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை.
எந்த குற்றமும் செய்யாத தனக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாக குமுறும் கோபால், தான் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரமாக முன்வைக்கும் சான்றுகளை யாராலும் மறுக்க முடியாது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. சி.சி.டி.வி. பதிவுகள் அடிப்படையில் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்த காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் சாட்சியம் கொடுக்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களும் சாட்சியமாக அழைக்கப்படவில்லை.
எல்லாவற்றிருக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் தன் பெயர் கோபி என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்படி பார்த்தாலும் கோபாலும் கோபியும் ஒன்று என நீதிமன்றமும் போலீசும் முடிவு செய்தது எப்படி? என்று தெரியவில்லை என்கிறார் கோபால்.
தற்போது தனக்கு உள்ள பொருளாதார முறையில் ஒன்று காசநோய்க்கு மருத்துவம் பார்க்கலாம் அல்லது நீதிக்காக போராடலாம் என கூறும் கோபால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட முடிவு செய்துவிட்டார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசை சந்திக்க வாய்ப்பு கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்.
சிறையில் கழித்த 7 ஆண்டுகளுக்கு அரசும் நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார் கோபால்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating