அரண்மனை குடும்பத்திடம் `செக்ஸ் – போதை’ பிளாக்மெயில்! : 100 ஆண்டில் முதன் முறையாக பகீர்!!

Read Time:4 Minute, 14 Second

“அரண்மனை குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தவறான செக்ஸ் வைப்பதை நாங்கள் படம் பிடித்துள்ளோம்.
போதை மருந்து சாப்பிடுவதையும் படம் பிடித்துள்ளோம். இந்த வீடியோ வெளியே பரப்பாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் தர வேண்டும்!” இப்படி ஒரு `பகீர்’ மிரட்டலை விடுத்த, இரண்டு பேரை, மாறுவேடத்தில் போய், ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசேஷ குழுவினர் மடக்கிப்பிடித்தனர். சமீபத்தில், லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதம் வந்தது. அரண்மனை முத்திரையுடன் கூடிய இந்த கடித உரையை திறந்து பார்த்தால் ஒரு கடிதம் இருந்தது. அதில் மேற்சொன்ன பகீர் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர் போலீசார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசியவன், `பணத்தை கொண்டு வாருங்கள்; நாங்கள் வீடியோவை யாருக்கும் தர மாட்டோம்’ என்று, தங்களை சந்திக்கும் இடத்தை பின்னர் சொல்வதாக சொல்லி துண்டித்துவிட்டான். மீண்டும் போலீஸ் துப்பறியும் குழுவை சேர்ந்த அதிகாரி, மொபைல் போனில் தொடர்பு கொண்டார். பார்க் லேன் பகுதியில் உள்ள ஹில்டன் ஓட்டலில் குறிப்பிட்ட பகுதிக்கு வரும்படி போனில் பேசியவன் கூறினான். அரண்மனை அதிகாரிகள் போல மாறுவேடத்தில், கடந்த மாதம் 11ம் தேதி ஓட்டலுக்கு சென்றனர் துப்பறியும் அதிகாரிகள். அதே சமயத்தில், பக்கத்து அறையில், போலீசாரை தயார் நிலையில் மாறுவேடத்தில் இருக்கவும் உத்தரவிட்டனர்.

சினிமாவில் வரும் காட்சி போல, குறிப்பிட்ட டேபிளில் இரு நபர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் பேச்சு தந்த அதிகாரி, சில நிமிடங்களில், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்ட, அடுத்த நொடி, அவர்களை மாறுவேடத்தில் இருந்த போலீசார், துப்பாக்கியை எடுக்கவிடாமல் தடுத்து, பிடித்து விட்டனர். அவர்களிடம் இருந்து வீடியோ `சிடி’க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.

அவர்கள் வசித்த `பிளாட்’டிலும் சோதனை நடந்தது. சில, `விசிடி’க்கள் சிக்கின. இருவரும் சொன்னது போல, அரண்மனை வாசி யாரும், இந்த `செக்ஸ்- போதை’ வீடியோவில் இருக்கவில்லை எபதும் தெரியவந்தது. எனினும், லண்டன் பத்திரிகைகள், இந்த விவகாரம் பற்றி பரபரப்பாக செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

இளவரசி டயானா, கார் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் உள்ள மர்மமே இன்னும் விலகாத நிலையில், நுாறாண்டு அரண்மனையிடம் `பிளாக்மெயில்’ செய்தது இப்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது. இதற்கு முன், 1891ம் ஆண்டு, ஏழாவது எட்வர்ட் மீது இரு விபசாரிகள் புகார் தெரிவித்திருந்தனர். `எங்களிடம் எட்வர்ட் வந்து போனார். அவர் எங்களுக்கு எழுதிய கடிதம் இதோ’ என்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுவிஸில்: குற்றவாளிகளில் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்!!
Next post கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு “மலடி’ பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்