நாட்டில் பௌத்த மதத்தை சீரழித்தது ஜாதிக ஹெல உறுமயவே!

Read Time:1 Minute, 59 Second

1383783942Buddistஇந்த நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு நாடுகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு நாட்டின் தேசியத்துவத்தை சீரழித்துள்ளதாக இன்று நாராஹென்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

நாட்டுக்காக மஹிந்தவா அல்லது வயிற்றுக்காக ரணிலா என்று இந்த முறை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தமுறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கட்சி மாறுவதில்லை என்று மக்கள் உறுதிமொழி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கட்சி மாறுவது ஜனநாயக விரோத செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் எந்தவொன்றும் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மேர்வின் சில்வா மற்றும் ரணில் விக்ரமசிங்க போன்றோர் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமையே மஹிந்த ராஜபக்ஷ செய்த தவறாகும் என்று ´துறவிகளின் குரல்´அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்!!
Next post ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண புனரமைப்புக்கு உட்படுத்தப்படும்!!