4-வது முறையாக உலக கோப்பை: இத்தாலியில் கோலாகல கொண்டாட்டம்

Read Time:5 Minute, 56 Second

Foot-Italy.jpg18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 32 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி கட்ட முடிவின்படி இத்தாலி-பிரான்ஸ் அணி கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் பெர்லின் நகரில் நேற்று இரவு நடந்தது. இத்தாலி-பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதி ஆட்டம் தொடக்கத்திலேயே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பிரான்சுக்கு `பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. அந்த அணி வீரர் மலோடா பந்தை கடத்தி கோல் போட சென்றார். இத்தாலி பின்கள வீரர் மெட்ராஸி அவரை கோல் போட விடாமல் தடுக்கும் விதமாக பவுல் செய்தார். இதில் அவர் கீழே விழுந்தார். இதை தொடர்ந்து அர்ஜென்டினா நடுவர் எலிசாண்டோ பெனால்டி வாய்ப்பு கொடுத்தார்.

இதை பயன்படுத்தி பிரான்ஸ் கேப்டன் ஷீடேன் கோலாக்கினார். நல்ல வேளையாக அவர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் எல்லையை தொட்டு மீண்டும் கம்பத்தில் இருந்து வெளியேறியது. நடுவர் அதை கோல் என்று அறிவித்தார். இந்த கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

19-வது நிமிடத்தில் இத்தாலி பதிலடி கொடுத்தது. கார்னர் வாய்ப்பை பயன் படுத்தி கேமரோசி அடித்த பந்தை பின்கள வீரர் மார்கோ மெட்ராஸி தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. முதல் பகுதி ஆட்டத்தில் மேலும் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்ததை இரு அணி வீரர்களும் வீண டித்தனர்.

2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் தொடக்கத்திலேயே தாக்குதல் கட்டத்தில் ஈடுபட் டது. இத்தாலியின் பின்களம் வலுவாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்த நேரத்தில் இத்தாலி அடித்த கோல் ஆப்சைடு என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கோல் எதுவும் விழாததால் 1-1 என்ற சமநிலையில் இருந்தது.

இதனால் கூடுதல் நேரம் 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் பிரான்சுக்கு 2 முறை கோல் வாய்ப்பு பறிபோனது. ரிபெரிப பந்தை கோல் கம்பத்தை விட்டு வெளியே அடித்தார்.

ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் வில்லி சக்னோல் அடித்த பந்தை ஷீடேன் தலையால் அருமையாக முட்டினார். இதை இத்தாலி கோல் கீப்பர் பபூன் மிகவும் அபாரமாக கையால் தட்டி விட்டு கோல் விழுவதை தடுத்தார். 110-வது நிமிடத்தில் ஷீடேனுக்கும், இத்தாலி பின்கள வீரர் மார்கோ மெட்ராஸிக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உணர்ச்சி வசப்பட்டு ஷீடேன் தனது தலையால் அவரது நெஞ்சில் முட்டினார்.

ஆட்ட நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்ட ஷீடேனை நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார்.

கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழாமல் 1-1 என்ற சமநிலையே இருந்தது. இதனால் உலக கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிப்பதற்காக பெனால்டி ஷுட் கடைபிடிக்கப்பட்டது.

இதில் இத்தாலி 5-3 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. பெனால்டி ஷுட்டில் இத்தாலியை சேர்ந்த பிர்லோ, மெட்டாரஸி டிரோசி, டெல் பியரோ, கிராஸ்கோ ஆகியோர் கோல் அடித்தனர்.

பிரான்ஸ் அணியில் வில்டார்ட், ஆபிதல், சக்னோல் கோல் அடித்தனர். டிரெஸ் கெட் அடித்த பந்து கோல் கம்பத்தில்பட்டு வெளியே சென்றது.

இத்தாலி அணி 4-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 1934, 1938, 1982-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்று இருந்தது.

இத்தாலி உலக கோப்பையை வென்றதால் அந்த நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு தெருக்களிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்கள். ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போல பெர்லின் மைதானத்தில் இருந்த இத்தாலி ரசிகர்களும் வெற்றியை கொண்டாடினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்
Next post ரஷியாவில் 600 பேரை கொன்று குவித்த பயங்கர தீவிரவாதி குண்டுவெடிப்பில் பலி