பெண் கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் விடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்: மீண்டும் சிறையில் அடைப்பு!!

Read Time:1 Minute, 28 Second

c527db8e-88d6-4561-976f-685685b8acc6_S_secvpfதிட்டக்குடி கொடிக்களம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். கடலூர் மகிலாகோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமீன்கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் சமரச தீர்வு ஏற்படுத்தி கொள்ளலாம் என்று கூறி மோகனுக்கு ஐகோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து மோகன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது. சமரச தீர்வு வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே மோகனுக்கு வழங்கிய ஜாமீனை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் ஜூலை 13–ந்தேதி அவர் கடலூர் மகிளா கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கடலூர் மகிளா கோர்ட்டில் மோகன் இன்று சரணடைந்தார். பின்னர் அவர் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போன் செய்து ஆபாச பேச்சு: பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மேலும் ஒரு மாணவி புகார்!!
Next post போரூரில் பாட்டியை குத்தி கொன்ற பெண் என்ஜினீயர் கைது!!