இவ் வாரத்திற்குள் விருப்பு இலக்கங்கள்!!

Read Time:1 Minute, 18 Second

647590894Untitled-1எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இவ்வாரத்திற்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுப் பட்டியல் தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் என, உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 6ம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது.

இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வேட்புமனுக்களையும் ஆராய்ந்து மாவட்ட மட்டத்தில் அந்தந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வௌியிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?
Next post முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!