டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!

Read Time:1 Minute, 48 Second

1585741064Untitled-1முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று முற்பகல் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தவேளை டளஸ் அழகப்பெருமவுக்கு, வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்தியிருந்த வாகனத்துடன் ஒருவர் காலி மாவட்ட செயலகத்திற்கு அருகில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ஒருவருடைய ஆதரவாளரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் வாகனம் தவிர்ந்த வேறு எந்தவொரு வாகனத்திலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக புகைப்படங்களை வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!
Next post பொது மக்களிடம் அர்ஜூண விடுக்கும் கோரிக்கை!!