மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!

Read Time:1 Minute, 45 Second

443823242Untitled-1தேசியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணை அறிக்கை தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பணிப்புரை கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னால் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றின் போது, மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!
Next post டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!