கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியரின் செல்போன், பணத்தை பறித்து சென்ற குரங்கு!!

Read Time:3 Minute, 19 Second

41dcc479-f487-4555-bb6f-daa6277e23b7_S_secvpfதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை கட்டிடத்தில் உள்ள ஒயர்களில் தொங்கி நாசம் செய்கின்றன.

மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களை பயமுறுத்தியும், பொருட்களை பிடுங்கியும் அட்டகாசம் செய்கின்றன. ரேசன் கார்டு, மனுக்களை கிழித்து எறிகின்றன.

குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று குரங்கு ஒன்று ஒருவரின் செல்போனை பிடுங்கி கொண்டு சென்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

நேற்று கலெக்டர் அலுவலகம் தேர்தல் பிரிவு அருகே ஓட்டு பதிவு எந்திரங்களில் சின்னம் அழிக்கும் பணி நடந்தது. இதில் பெண் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரது சிறிய பையை அருகில் வைத்திருந்தார்.

அதில் செல்போன் பென்டிரைவ் ரூ.3 ஆயிரம் பணம் இருந்தது. அங்கு சுற்றி கொண்டிருந்த குரங்கு ஒன்று நைசாக வந்து பையை எடுத்துக் கொண்டு ஓடியது.

இதனை கண்டதும் பெண் ஊழியர் மற்றும் பணியில் இருந்த ஊழியர்கள் குரங்கு பின்னால் ஓடினர். வேகமாக ஓடிய குரங்கு கலெக்டர் ஆபீஸ் கட்டிடத்தில் ஏறியது. பையை திறந்தது. அதிலிருந்த பென் டிரைவ் மற்றும் பணத்தை கீழே வீசியது. அதனை பெண் ஊழியர் எடுத்துக் கொண்டார்.

பின்னர் பையில் இருந்த செல்போனை எடுத்தது. அதனை முன்னும் பின்னும் பார்த்தது. மேலும் செல்போனை எடுத்துக் கொண்டு பையை வீசியது. குரங்கு ஒவ்வொன்றாக வீசியதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதன் கையில் சிக்கிய செல்போனை எப்படி வாங்குவது என்று அனைவரும் சிந்திக்க தொடங்கினர். சிலர் குரங்கை நோக்கி கைகளை அசைத்து சத்தம் போட்டனர். இதனால் கட்டிடத்தில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு சென்றது.

அங்கிருந்து நைசாக ஊழியர்களை எட்டி பார்த்தது. சிறிது நேரம் செல்போனை புரட்டி எடுத்த குரங்கு இறுதியாக மேலே இருந்து செல்போனை வீசியது. போன் தரையில் கிடந்த மணலில் வந்து விழுந்தது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. பின்னர் தனக்கே உரிய பாணியில் முகத்தால் செய்கை செய்துவிட்டு குரங்கு தனது கூட்டத்தை நோக்கி சென்றது.

குரங்கின் அட்டகாசம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!
Next post கணவர் குடிபோதையில் தினமும் தகராறு: திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை!!