திருப்பூரில் நகை அடகு கடையில் 55 பவுன் கொள்ளை: 2 பேர் சிக்கினர்!!

Read Time:2 Minute, 33 Second

52e428ce-4812-4dab-acd1-9ac52feb084b_S_secvpfதிருச்சி மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லழகு (வயது 43). இவர் திருப்பூர் வலையன்காடு தெற்கு பாலமுருகன் நகர் பகுதியில் தங்கநகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ரூ.55 லட்சம் மதிப்பிலான 300 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அடகுக்கடையில் வேலை செய்து வந்த நல்லழகுவின் தம்பி செல்வம் கடத்தி கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை குறித்து 15. வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய், துணை கமிஷனர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகையா, ராஜசேகர், சண்முகம், மோகனசுந்தரி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான 45 பேரை பிடித்து தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலையான செல்வத்தின் உறவினர் பிரபு (29) மற்றும் பிரபுவின் நண்பர் நரேன் (30) ஆகியோர் கொலையாளிகள் என்பது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் பிரபுவும், நரேனும் சிங்கப்பூரில் வைத்து நண்பர்களானார்கள். இங்கு வந்த பின்னர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பணக்கஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பிரபு தனது உறவினர் செல்வம் நகை அடகு கடை நடத்தி வருவதாகவும் அவரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

அதன்படியே செல்வத்தை கொலை செய்து விட்டு 55 பவுன் நகையை கொள்ளையடித்தது தெரியவருகிறது. 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குட்டிக் குழந்தைகளின் அதி ஆச்சர்யமான பூ முகம்: க்யூட் வீடியோ!!
Next post சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!