வகுப்பறையில் ஆபாச படம்…குடிபோதையில் ரகளை… கோவையில் பாதை மாறும் மாணவிகள்!!

Read Time:3 Minute, 48 Second

6c480cc8-f6ef-4d97-a821-51faaa400b44_S_secvpfதொழில்நுட்ப வளர்ச்சி காரணமான இன்று பள்ளி மாணவ, மாணவிகள் கூட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை இருந்த போதிலும் அதை கண்டு கொள்ளாமல் சில மாணவிகள், பாதுகாப்பு என்ற போர்வையில் பந்தாவுக்காக நவீன செல்போன்களை வைத்துள்ளனர். அந்த செல் போன்களே மாணவர்களை தவறான பாதைக்கு தள்ளி விடுகிறது.

கோவையில் கடந்த வாரம் ஒரு பள்ளியில் வகுப்பறையில் 7–ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் செல்போனில் ஆபாச படம் பார்த்ததும், அதனை கண்டுபிடித்த ஆசிரியையை மாணவிகள் மிரட்டிய சம்பவம் இதற்கு சாட்சி. மாணவிகளின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி மாணவிகள் 7 பேரையும் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது.

தற்போது மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகி அவர்களின் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு கோவை துடியலூரில் பிளஸ்–2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளை செய்தது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது.

தனது காதல் தோல்வியை சக தோழிகளுக்கு மது விருந்து கொடுத்த பகிர்ந்ததன் விளைவு தான் மாணவியின் போதைக்கு காரணம் உச்ச கட்ட வேதனை. அடுத்தடுத்து அரங்கேறி வரும் இச்சம்பவங்கள் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மாணவ, மாணவிகள் தடம் மாற காரணம் அவர்களது பெற்றோர்களா? அல்லது கல்வி முறையா? நாகரீக வளர்ச்சியா? என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு காரணங்கள் கூறப்பட்டாலும் இவை அனைத்திற்கும் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இயந்தரதனமான இன்றைய உலகில், பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விடுவ தோடு தங்கள் வேலை முடிந்து விட்டதாக சில பெற்றோர்கள் கருதுகின்றனர். குழந்தைகள் எவ்வாடி படிக்கின்றனர்? அவர்களின் நண்பர்கள் யார்–யார்? என எதையும் கண்டுகொள்ளாததன் விளைவு தான் குழந்தைகள் தடம் மாற காரணமாகி விடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டீன்–ஏஜ் பருவத்தில் மாணவிகளிடம் தடுமாற்றம், குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த சமயத்தில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலாகவும், முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.

பாசம் என்ற போர்வையில் மாணவிகள் கேட்கும் செல்போன்கள், இன்டர்நெட் வசதியுடன் கூடிய லேப்டாப் போன்றவற்றை வாங்கி கொடுத்து அவர்களை பெற்றோர்களே பாழுங்கிணற்றில் தள்ளி விடக்கூடாது என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!!
Next post அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!