தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கா அங்கீகாரம்

Read Time:2 Minute, 4 Second

usa_flag_3.gifஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை அமெரிக்க நாடாளுமன்றம் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. இது, இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை அங்கீகரிப்பது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் (செனட்) கொண்டு வரப்பட்ட தீர்மானம், 358 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. இதுகுறித்த தகவலை வெளியிட்ட குடியரசுக் கட்சி எம்பி-யும், இந்திய ஆதரவாளருமான ஜியோ வில்சன், தீபாவளி பண்டிகையை மரியாதை செய்யும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருப்பது இதுவே முதல் முறை என்றார். அமெரிக்க அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், மென்பொருள் என அனைத்து துறைகளிலும் இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அண்மையில், லூசியானா மாகாண ஆளுநராக அமெரிக்கா வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் வெற்றி பெற்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.தங்களின் கடின உழைப்பு, திமையான செயல்பாடுகளால் உரிய முக்கியத்துவம் பெற்று வரும் இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவமாகவே, இது கருதப்படுகிறது.இந்துக்கள் விமர்சையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகை, இவ்வாண்டு வரும் நவம்பர் 8ம் தேதி (சில இடங்களில் 9ம் தேதி) கொண்டாடப்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்
Next post காட்டுத் தீயினால் சூழலுக்கு அதிகளவில் கேடு அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை