களக்காட்டில் ஆஸ்பத்திரி ஊழியர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கொன்றோம்- கைதான வாலிபர்கள் வாக்குமூலம்!!

Read Time:4 Minute, 30 Second

cdace6cb-0b6a-4930-8dee-3b60ea09f6b3_S_secvpfநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த வாரம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டவர், குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தை சேர்ந்த தாணுமூர்த்தி (50) என்று தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட தாணு மூர்த்தி நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கொலைக்கான காரணம் என்ன, அவரை கொலை செய்தது யார்? என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக தாணு மூர்த்தி கொலை செய்யப்பட்ட ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி குமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியை சேர்ந்த அல் அபீஸ் (29), ஜெய்லானி (29), ஷேக் மதார் (26), விழுப்புரத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற இஸ்மாயில் (29) ஆகிய 4 பேர்களை கைது செய்தனர்.

கைதான அல் அபீஸ் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கொலை செய்யப்பட்ட தாணுமூர்த்தி என்னிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தை வசூலிக்க நான் அடிக்கடி தாணுமூர்த்தி வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது எனக்கும் தாணுமூர்த்தி மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளோம்.

இந்த விபரம் தாணு மூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னிடம் தகராறு செய்தார். மேலும் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்து, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவதாக கூறினார்.

இதனால் எனது நண்பர்கள் ஜெய்லானி, ஷேக் மதார் ஆகியோருடன் சேர்ந்து தாணுமூர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். விழுப்புரத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற இஸ்மாயிலையும் எங்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டோம்.

சம்பவத்தன்று காரில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று பணப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்தோம். அவரும் எங்களுடன் காரில் வந்தார். இறச்சகுளம் பகுதியில் காரில் வரும் போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

அவரது உடலை மறைக்க காருடன் களக்காடு மலைப்பகுதிக்கு சென்று அவரது உடலை அங்கு வீசி விட்டு வந்து விட்டோம். அடையாளம் தெரியாமல் இருக்க தாணுமூர்த்தியின் முகத்தை கல்லால் சிதைத்தோம். எங்களை பிடிக்க முடியாது என்று நினைத்தோம். ஆனால் போலீசார் அவர் யார்? என்று கண்டுபிடித்து எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். கொலையாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கரன்கோவில் அருகே மாணவி திருமணத்தை தடுக்க சென்ற சப்–இன்ஸ்பெக்டர், வக்கீல் அறையில் பூட்டி சிறைவைப்பு!!
Next post நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் தலையை துண்டித்து கொலை – கணவர் போலீசில் சரண்!!