5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’

Read Time:1 Minute, 27 Second

W.Football.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (காலணி) வழங்கப்படும். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர் குளூஸ் கோல் அடிப்பதில் முன்னணியில் இருந்தார். அரை இறுதி வரை அவர் 5 கோல்கள் அடித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஜெர்மனி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

குளூசை தாண்டி மற்ற வீரர்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. 5 கோல்கள் அடித்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச கோலாகும். இத னால் 5 கோல்கள் அடித்த குளூசுக்கு தங்க காலணி வழங்கப்பட்டது.

உலக கோப்பையில் தனிப்பட்ட வீரர் 5 கோல் அடிப்பது மிக குறைவாகும். 1962ம் ஆண்டுக்கு பிறகு இப்படி குறைவான கோலை தனிப்பட்ட வீரர் அடித்துள்ளார். குளுஸ் கோஸ்டாரிகா, ஈக் வடார் அணிகளுக்கு எதிராக 2 கோலும், அர்ஜென்டினாவுக்கு எதிராக ஒரு கோலும் அடித்தார்.

இந்த உலக கோப்பையில் 8 வீரர்கள் தலா 3 கோல்கள் அடித்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது
Next post அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்