மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேண்: சிங்கல்!!

Read Time:1 Minute, 57 Second

db6190ab-d948-4804-8ec8-34549ca8d4da_S_secvpfமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர்.

சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். சுஹர்ஷா பட் என்பவர் ஐந்தாவது இடத்தை பிடித்து ஆண்களுக்கு ஆறுதல் அளித்தார். நேர்முக தேர்வு மற்றும் தனித்திறமை ஆகிய தேர்வுகள் முடிந்த நான்கு நாட்களுக்கு முதன்முறையான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சாதனை பற்றி முதல் இடம் பிடித்த மாற்று திறனாளியான ஐரா சிங்கல் கூறும் போது “முன்பு தேர்வில் வெற்றி பெற்ற போதும் மாற்று திறனாளி என்பதால் வேலை இல்லை என்று நிராகரிக்கப்பட்டேன். ஆனால் இப்போது நான் மாவட்ட ஆட்சியர். மேலும் மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே வாழ்க்கையில் அதிக போராட்டங்களை எதிர்கொண்டேண். மற்ற பெண்களை போலவே ஒடுக்கு முறைக்கும், பிற்போக்கு தனமான செயல்களுக்கும் ஆளானேன் என தெரிவித்தார்.

1364 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்!!
Next post ஜம்முவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!