உடல் உறுப்புக்காக சிறுவன் கடத்திக் கொலை?: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!!

Read Time:1 Minute, 30 Second

ff9ce1eb-1c37-4a64-958a-59030ec3db5e_S_secvpfஉத்தரபிரதேசத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். எனவே, உடல் உறுப்புக்காக அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சந்த் ரவிதாஸ் நகர் மாவட்டம் அகமத்பூர் புல்வாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் சரோஜ். பத்து வயதான இச்சிறுவன் நேற்று பிற்பகல் திடீரென காணாமல் போயுள்ளான். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகே உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில், சரோஜின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சில தனியார் மருத்துவமனைகள் உள்ளதால், உடல் உறுப்புகளுக்காக சரோஜ் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!
Next post கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!