இலங்கையில் 923 எச்.ஐ.வி. நோயாளர்கள்

Read Time:3 Minute, 29 Second

25 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயின் காரணமாக உலகத்தில் மரணமாகியுள்ளனர். வைரஸ் ஒன்றின் காரணமாக இந்த நோய் பாலியல் உறவு மூலமே பரவுகின்றது. இவ்வாறு வவுனியா சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி டாக்டர் நவரட்ணசிங்கம் ஜெனகன் தெரிவித்தார். 65 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.நோயினாலும் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினாலும் உலகத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் வவுனியா சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார். நமது நாட்டில் 923 பேர் எச்.ஐ.வி.யினாலும் எயிட்ஸ் நோயால் 255 பேரும் உள்ளனர். இதுவரையில் 168 எயிட்ஸ் நோயாளிகள் மரணமாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது, 85 சதவீதம் தவறான பால் உறவு மூலமே இந்த நோய் அதிகளவில் பரவுகின்றது. அரச இடைநிலை அலுவலர்களுக்காக சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய அவர், பாலியல் ரீதியில் தவிர வேறு எந்தவகையிலும் எயிட்ஸ் மற்றவர்களுக்கு தொற்றக்கூடியது அல்ல. 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டது. 83 ஆம் ஆண்டு தான் இந்த நோய் ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டது. எச்.ஐ.வி.என்னும் பெயர் 1984 இல் இடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வந்தன.

எச்.ஐ.வி. தொற்றியவுடன் எயிட்ஸ் நோய் வந்துவிடும் என்ற கருத்து தவறானதாகும். குறைந்தது 10 வருடத்தின் பின்னர்தான் அவர் எயிட்ஸ் நோயாளியாவார். அவ்வளவு காலம் நோயை பரப்பிக்கொண்டு இருப்பார். சாதாரணமான ஒரு மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எச்.ஐ.வி. புகுந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவரும், உடல்மெலிவு தொடர்ச்சியான காய்ச்சல், கழுத்தில் நெறிபோடுதல் ஆரம்ப அறிகுறியாக தென்படும்.

நமது நாட்டில் 1987 ஆம் ஆண்டுதான் எச்.ஐ.வி. நோயாளி இனம்காணப்பட்டார். கடைசியாக வெளியான அறிக்கைகளின் படி இலங்கையில் 923 எச்.ஐ.வி.நோயாளிகள் உள்ளனர். இவர்களில் எயிட்ஸ் நோயாளிகள் 255 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இதிலும் ஆண்களே அதிகமாகும். எயிட்ஸ் நோயாளிகள் 168 பேர் மரணித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் இரு எயிட்ஸ் நோயாளிகள் இறந்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “டிவி” பார்த்தபடி சாப்பிடும் குழந்தைகளுக்கு கோளாறு
Next post பாஸ்போர்ட் மோசடி-டிராவல்ஸ் ஏஜெனட், புரோக்கர் உள்பட மூவர் கைது