பாம்பு, உடும்புகளுடன் இருளர்கள் ஆர்ப்பாட்டம்

Read Time:1 Minute, 33 Second

indirular.jpgவிழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தினர் பாம்பு, உடும்புகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருக்கோவிலுர் இருளர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து வரும் ஆர்.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். கொளத்துõர் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இருளர் இன மக்கள் பாம்பு, எலி, உடும்பு ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து மனு அளித்தனர். உரிய விசாரணை நடத்தி சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தென் மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தனுஷ்-வடிவேல்-திரிஷா படப்பிடிப்புகள் பாதிப்பு
Next post சுவிசில் புளொட் உறுப்பினர்கள் மீதான கொலைமுயற்சி வழக்கு மீண்டும் விசாரணைக்கு..