“டிவி” பார்த்தபடி சாப்பிடும் குழந்தைகளுக்கு கோளாறு

Read Time:1 Minute, 35 Second

08ca0kl379.gifகுழந்தைகள், “டிவி’ பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால், அவர்களுக்கு சாப்பிடுவதில் கோளாறுகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மின்னெசொடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்:குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில், “டிவி’ பார்ப்பது, அவர்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. துõக்கத்தில் பிரச்னை, கல்வி கற்பதில் ஆர்வமின்மை, கவனக்குறைவு ஏற்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.சாப்பிட்டுக் கொண்டே “டிவி’ பார்த்தால், சாப்பிடுவதிலும் குழந்தைகளுக்கு கோளாறு ஏற்படுகிறது. மற்ற குழந்தைகளை விட, “டிவி’ பார்த்துக் கொண்டே சாப்பிடும் குழந்தைகளுக்கு படிப்படியாக, உட்கொள்ளும் உணவின் அளவு குறையும். அதே போல, காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றின் மீது ஆர்வம் குறையும். இவர்கள் அதிகமாக குளிர்பானங்கள் மற்றும் வறுத்த உணவு வகைகளையே விரும்புவோராக மாறி விடுகின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post இலங்கையில் 923 எச்.ஐ.வி. நோயாளர்கள்