தோற்றப்பொலிவில் ஆசிய குட்டீஸ் அதிருப்தி!
தோற்றப்பொலிவில் தங்கள் நிலை குறித்து, மற்ற நாட்டு குழந்தைகளை விட, ஆசிய நாடுகளை சேர்ந்த குழந்தைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இது தெரியவந்துள்ளது. பல நாடுகளில், பல இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் குழந்தைகள் உடல் எடை, தோற்றப்பொலிவு குறித்து, வட அமெரிக்க ஆராய்ச்சி அமைப்பு மற்றும் டெம்பிள் பல்கலைக்கழக நிபுணர்கள் சேர்ந்து இந்த சர்வேயை நடத்தினர். நான்காவது வகுப்பு முதல் ஆறாவது வகுப்பு வரை உள்ள ஐந்து ஆயிரம் குழந்தைகளிடம் சர்வே நடத்தப்பட்டது. குழந்தைகள், அதிக குண்டாக இருப்பது பற்றி ஆராய்ந்து வரும் இந்த அமைப்புகள், குழந்தைகளுக்கு தங்கள் தோற்றப்பொலிவு குறித்து என்ன கருத்து உள்ளது என்று ஆராய்ந்தன. மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகள், தாங்கள் குண்டாக இருப்பது பற்றியோ, தோற்றப்பொலிவு பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால், ஆசிய நாடுகளை சேர்ந்த குழந்தைகள், தங்கள் தோற்றப்பொலிவு குறித்து கவலை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கலாச்சார அடிப்படையில் பார்த்தால், ஆசிய நாடுகளில், குண்டாக இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு த்தான் அதில் அதிருப்தி காணப்படுகிறது. பல ஆண்டாக கணக்கிட்டால், ஆசிய குழந்தைகள், குண்டாக இருந்ததே இல்லை. சுமாரான தோற்றப்பொலிவுடன் இருப்பர். சமீப காலமாக, அவர்களின் உணவு முறை, வாழ்க்கை முறை மாறியதை அடுத்து, அவர்களுக்கு எடை அதிகரித்து விட்டது.
இனத்தின் அடிப்படையில் இந்த குழந்தைகள் உடல் தோற்றம் அமையவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் அப்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் தாங்கள் குண்டாக இருப்பதாக கவலைப்படுவதாலும், அவர்கள் உடல் எடை மேலும் அதிகரிக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் குண்டாக இருப்பதற்கு காரணம், அவர்களின் உணவு, பழக்க வழக்க முறை தான் என்பதை உணர்ந்து, அவர்கள் விஷயத்தில் பெற்றோர்கள், அவர்களை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனோரீதியான பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் இருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மேற்கத்திய பாணி உணவு முறை, பழக்க வழக்கங்கள் புகுந்து வருவதால், குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...