ஹெல்மெட் அணிவதால் பார்வை குறைபாடு, தலை சூடேறும் அபாயம் எதுவும் இல்லை: ஆய்வில் தகவல்!!

Read Time:2 Minute, 34 Second

e8a5a41d-ac80-4cb6-81c8-4608aeb0d974_S_secvpfஇருசக்கர வாகன ஓட்டுபவர், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியே வண்டும் என அரசு கட்டாய சட்டம் கொண்டு வந்துள்ளது. வருகிற 1–ந் தேதி முதல் அமல்படுத்தபட உள்ளது.

ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தபடுகிறது. மோட்டார் சைக்கிள் விபத்துகளில் தலையில் அடிபடுவதால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

ஹெல்மெட் அணிந்தால் உயிரிழப்புகள் மட்டுமின்றி தலையில் அடிபடுவதை தடுக்கலாம். ஹெல்மெட் அணிந்தால் சாலைகளை சரியாக பார்க்க முடியாது, பின்னால் இருந்து ஒலி எழுப்பும் வாகனங்களை அறிந்து கொள்ள முடியாதபடி காது கேட்பு திறன் குறையும்.

தலை சூடாகி உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்ற சந்தேகம் பலரிடம் கேள்வியாக உள்ளது. பொது இடங்களில் இதுபற்றி நீண்டநேர விவாதம் நடத்தும் அளவுக்கு பூதாகர விஷயமாகி விட்டது.

ஹெல்மெட் அணியும் போது 210 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். சில தரமற்ற ஹெல்மெட்களில் வேண்டுமானால் பார்வை மறைக்கபடலாம்.

ஹெல்மெட் அணியாமல் வேகமாக சென்றால் செவிப்பறைகள் பாதிக்கப்படும். ஹெல்மெட் அணிந்தால் போக்குவரத்து ஓசைகளை தெளிவாக கேட்க முடியும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து கொண்டு நெருக்கடியான இடங்களில் செல்லும் போது தலையில் சூடேற வாய்ப்பு உள்ளது. மற்ற நேரங்களில் ஹெல்மெட்டில் உள்ள பஞ்சு வெப்பத்தை உள்ளே கடத்தாமல் தடுக்கிறது.

ஹெல்மெட் அணிவதால் பார்வை குறைபாடு, காது கேட்பு திறன், தலை சூடேறும் அபாயம் எதுவும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு தரமான ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனது கணவரை அடித்துக் கொன்று விட்டனர்: கருப்பசாமியின் மனைவி கண்ணீர்!!
Next post திருச்சியில் ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்: கைதான 5 பேரும் சிறையில் அடைப்பு!!