பா.ஜனதாவின் நான்கு தலைவர்களையும் பதவி நீக்கக்கோரி டெல்லியில் காங்., ஆம் ஆத்மி போராட்டம்!!

Read Time:2 Minute, 27 Second

41fddabf-8361-4ef1-804d-4a7b74bde3d2_S_secvpfலலித் மோடி பிரச்சினையில் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை நீக்க வேண்டும். கல்வி தகுதி பிரச்சினையில் ஸ்மிரிதி இரானி மற்றும் ஒப்பந்தம் அளித்த விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில மந்திரி பங்கஜா முண்டே ஆகியோரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காங்கிரஸை சேர்ந்த ஏராளமானோர் புதுடெல்லியில் உள்ள பா.ஜனதாவின் தலைமைக்கழகம் முன் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லலித் மோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை உடனே பதவியில் இருந்து விலக்க வேண்டும்.

ஸ்மிரிதி இரானி கல்வி விவகாரத்தில் விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

மகாராஷ்டிர மாநில மந்திரி பங்கஜா முண்டே ரூ. 200 கோடி அளவில் ஒப்பந்தம் அளித்ததில் தவறு நடந்திருப்பதால் அவரையும் நீக்க வேண்டும். ஆகிய நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

இதேபோல் ஸ்மிரிதி இரானி வீட்டின் முன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தோமரை கைது செய்த மத்திய அரசு ஏன் ஸ்மிரிதி இரானியை கைது செய்யவில்லை. அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். அவரிடம் கல்வி சான்றிதழ் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!
Next post ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பு: சயான் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!!