தாஜ்மகாலில் வைபை வசதி: முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம்!!

Read Time:1 Minute, 26 Second

3ddf1218-62ba-4cec-848a-8b476a116ded_S_secvpfசுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் தாஜ்மகாலில் வைபை வசதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி, முதல் அரை மணி நேரத்துக்கு இலவசமாக வைபை மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். அதன்பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப பணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் உள்ளன.

அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சார்பில், வினாடிக்கு 100 மெகாபைட் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கக்கூடிய வகையில் இந்த வைபை வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அனைத்து நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் வைபை மூலம் இணையதள வசதியை ஏற்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!
Next post யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!