பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

Read Time:3 Minute, 15 Second

volcano_002பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனைகளுடன் பசிபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்கு சென்றுள்ளார்.

மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்த குழுவின் திட்டம்.

இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கி கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்கு வந்த அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எரிமலை இருந்த பள்ளத்தாக்கில் கயிறு மூலம் இறங்க தொடங்குகிறார்.

சிறிது நேரத்தில், கொதிக்கும் எரிமலை குளத்திற்கு சில மீற்றர்கள் அருகில் வந்த அவர், கைகளை விரித்தவாறு அங்கே சிறிது நேரம் நின்று எரிமலையின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கிறார்.

அப்போது, பல அடிகள் உயரத்திற்கு எரிமலை குழம்புகள் பொங்கி எழுந்தபோதும் அவர் அசையாமல் அங்கே நின்று அதனை கவனிக்கிறார்.

ஆளில்லா குட்டி விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கமெராக்கள் இந்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது.

இந்த சாகச சம்பவம் குறித்து பேசிய அந்த ஆராய்ச்சியாளர், கொதிக்கும் எரிமலைக்குள் இறங்குவது என்பது எளிதான காரியம் அல்ல.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலும் இந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எரிமலைக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தபோது மேற்பரப்பு குழுங்குவது போன்று உணர்ந்ததாகவும், பாதுகாப்பு உடையை மீறி அனல் காற்று தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிமலை பகுதிகளில் உள்ள நுண்ணிய உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தவே இந்த சாகசத்தை செய்துள்ளதாகவும், தற்போது சேகரித்துள்ள தகவல்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என அவர் பெருமையுடன் கூறியுள்ளார்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!
Next post ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!