மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு!!

Read Time:1 Minute, 58 Second

3e6f4420-6138-47d9-9411-0598e56b65d0_S_secvpfமகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான மதரஸாக்கள் இயங்கி வருகின்றனர். இங்கு மதம் சம்பந்தப்பட்ட பாடங்களுடன் கட்டாயமாக நான்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மைத் துறை மந்திரி ஏக்நாத் காட்சே கூறும்போது, ‘‘எல்லாத் துறைகளிலும் சிறுபான்மையின் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவ, அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட பாடங்களை சொல்லிக்கொடுக்கும் அதேசமயம், பிற பாடங்களின் அறிவையும் புகட்டவேண்டும்.

எனவே, மதராஸாக்களில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.

மகாராஷ்டிராவில் 1890 மதரஸாக்கள் உள்ளன. இதில் 550 மதரஸாக்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளன. இங்கு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கும். தற்போது மதரஸாக்களுக்கு இரண்டு லட்சம் வரை மாநில அரசு மானியம் கொடுக்கிறது. மற்ற நான்கு பாடங்களும் சொல்லிக் கொடுக்காவிட்டாலும், இந்த அடிப்படை மானியம் தொடரும்.

ஆனால், நவீனமயமாக்கலுக்கான 3 லட்சம் ரூபாய், புத்தகங்கள் வாங்குவதற்கான 50 ஆயிரம் ரூபாய் ஆகிய கூடுதல் மானியம் கிடைக்காது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காக்கா முட்டை பார்த்த தோனி!!!
Next post மருத்துவரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் மிகா சிங் டெல்லியில் கைது!!