கணவரை பரிதவிக்கவிட்டு 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!!

Read Time:2 Minute, 34 Second

a65cf398-38b7-4a49-8d02-c6e48ea0e28a_S_secvpfசென்னை கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). லாரி டிரைவர்.

இவர் கூடுவாஞ்சேரி போலீசில் இன்று காலை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–

எனது மனைவி வசந்தி (34). எங்களுக்கு ராகுல் (15), ராஜேஷ் (14), அரிகரன் (9) ஆகிய மகன்களும் அழகம்மாள் (9), வாணிஸ்ரீ (8) ஆகிய மகள்களும் உள்ளனர்.

ராகுல் மற்றும் ராஜேஷ் கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். மற்ற 3 பேரும் ஆதனூர் டி.டி.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். வசந்தி கூடுவாஞ்சேரி அடுத்த சீனிவாசபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

அப்போது வேலூரைச் சேர்ந்த ஒருவருடன் வசந்திக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அந்த நபர் ஒரு நாள் என் வீட்டிற்கே வந்தார். இதனை நான் கண்டித்தேன்.

இந்நிலையில் கடந்த 6–ந்தேதி காலை நான் வேலைக்கு சென்ற பிறகு எனது மனைவி, 5 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் காரில் ஏறி ஓடி விட்டார். மாலையில் வேலையை முடித்து விட்டு வந்து பார்த்த போது வீட்டில் யாரும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போன் செய்தால் சுவிட்ச்ஆப் என்று வருகிறது.

பள்ளிக்கு சென்று கேட்டதற்கு 5 குழந்தைகளின் பள்ளி மாற்று சான்றிதழ்களும் எனது மனைவி வாங்கி சென்று விட்டதாக கூறினர். இதனால் நான் தனிமையில் பரிதவித்து வருகிறேன்.

எனவே 5 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் மாயமான எனது மனைவியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுளாளர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் 3 பெண்களை கற்பழித்த 8 பேர் கும்பல்!!
Next post திருநின்றவூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி!!