தீவகத்திலிருந்து இறைச்சி எடுத்துவர தடை விதிக்குமாறு கோரிக்கை

Read Time:1 Minute, 59 Second

தீவுப் பகுதியில் இருந்து கால்நடை களும் இறைச்சியும் கடத்தப்பட்டு மாநகரசபைப் பிரிவில் விற்பனை செய் யப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநகரசபைப் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் கோரியுள்ளனர். இது தொடர்பாக அரச அதிபருக்கு அவர்கள் கூட்டாக அனுப்பியுள்ள கடி தம் ஒன்றிலேயே இவ்விடயம் பிரஸ் தாபிக்கப்பட்டுள்ளது. அரச அதிபருக்கு அனுப்பப்பட்ட கடி தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: தீவுப் பகுதியில் இருந்து ஆடு, மாடு களைக் கொண்டுவருவது தடை செய் யப்பட்டுள்ள போதிலும் பலரும் ஆடு, மாடு இறைச்சிகளை எடுத்துவந்து யாழ். மாநகரசபைப் பிரிவில் விற்பனை செய் கிறார்கள். பல லட்சம் ரூபாவை செலுத்தி குத் தகை பெற்ற குருநகர், நாவாந்துறை, பாஷையூர், நரிக்குண்டு, புங்கங்குளம் ஆகிய இடங்களில் மாநகர சபையிட மிருந்து குத்தகைக்கு பெற்ற 11 கடை களை எடுத்த நாம் பாதிக்கப்பட்டுள் ளோம். மாநகர சபைக்குரிய குத்தகைப் பணத் தைக் கூட செலுத்தமுடியாத நிலை யில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தீவுப் பகுதி பிரதேச அதி காரிகளுடன் தொடர்புகொண்டு முடி வுக்கு கொண்டுவரவேண்டும். இப்போதைய நிலை நீடித்தால் மாத இறுதியில் கடைகளைப் பூட்டவும் முடிவு செய்துள்ளோம் என்று உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி
Next post வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!