ராமநாதபுரம் அருகே பீகார் மாநில வாலிபர் அடித்துக் கொலை!!

Read Time:2 Minute, 29 Second

43fb7f35-b51b-4cc5-a6d3-67761c29d697_S_secvpfராமநாதபுரம் மாவட்டம், முதுநாழ் கிராமத்தில் வசிப்பவர் விமலா (வயது 21). நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வட மாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இதனை நம்பி வசந்தி தனது நகையை கொடுக்க, அதனை பாலீஷ் போட்டு கொடுத்தனர். நகையை பெற்ற வசந்தி, எடை குறைந்துவிட்டதாக கூறி வடமாநில இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் பாலிஷ் என்ற பெயரில் நகை மோசடி செய்யப்படுவது போன்ற சம்பவம் என கருதிய அவர்கள், வட மாநில இளைஞர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பிவிட, பிடிபட்டவரை பிடித்து தாக்கினர். பின்னர் அவர் ராமநாதபுரம் பஜார் போலீசல் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் அவரது பெயர் டில்கோஸ்குமார் (19) என்றும், பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், பூலஸ் கிராமத்தை சேர்ந்த ராமநாராயணன் யாதவ் மகன் என்பதும் தெரிய வந்தது. விசாரணையின்போது டில்கோஸ் குமாருக்கு திடீர் வலிப்பு ஏற்படவே, அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொன்று சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது டில்கோஸ்குமார் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்படவே, மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் கணபதி விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து முதுநாழ் கிராம மக்கள் தாக்கியதில் டில்கோஸ்குமார் இறந்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை: கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை!!
Next post திருப்பதியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய டீ மாஸ்டர் கைது!!