உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரராக பொடோல்ஸ்கி தேர்வு

Read Time:1 Minute, 44 Second

Foot.1.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் சிறந்த இளம் வீரராக ஜெர்மனி அணியை சேர்ந்த 21 வயதான லுகாஸ் பொடோல்ஸ்கியை பிபா டெக்னிக்கல் கமிட்டி தேர்வு செய்து உள்ளது.

இந்த விருதுக்காக நடத்தப்பட்ட இன்டர்நெட் ஓட்டெடுப்பில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அதிக ஆதரவு கிடைத்து இருந்தது. அர்ஜென்டினா வீரர் மெஸ்சி 2-வது இடத்திலும், ஈகுவடார் வீரர் லுயிஸ் வாலென்சியாவுக்கு 3-வது இடமும் கிடைத்து இருந்தது. ஓட்டெடுப்பில் பொடோல்ஸ்கிக்கு 4-வது இடமே கிடைத்து இருந்தது.

ஆனால் பிபா டெக்னிக்கல் கமிட்டி முடிவின் படி லுகாஸ் பொடோல்ஸ்கி சிறந்த இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1985-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு பிறந்தவர்கள் தான் இந்த விருதுக்கு தகுதி படைத்தவர்கள். சிறப்பான ஆட்டம், விதிமுறைக்கு மாறாக ஆடாமல் இருத்தல் ஆகியவை கருத்தில் எடுத்து கொள்ளப்படும்.

21 வயதான் லுயிஸ் பொடோல்ஸ்கி 6 ஆட்டத்தில் விளையாடி 3 கோல்கள் அடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் சாலை விபத்தில் டோங்கா நாட்டு இளவரசர் பலி
Next post சீனாவில் வெடிவிபத்து: 43 பேர் பலி