மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!

Read Time:1 Minute, 46 Second

56753704-255b-4a54-86d0-ff70fe1f4a31_S_secvpfமத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலிராஜ்பூர், மண்ட்லா, ஹோசன்காபாத் மாவட்டங்களில் பரிட் கார்த்த முறையில் முட்டையை சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் மதிய உணவில் முட்டையை சேர்க்கலாம் என்று அரசுக்கு சிபாரிசு செய்தனர். முட்டையில் புரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாரம் இருமுறை முட்டையை சேர்க்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் வராது என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சைவப்பிரியர் என்பதால் அவர் முட்டை அசைவம் என்று கூறி அதிகாரிகளின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார்.

முட்டைக்குப் பதிலாக கர்ப்பிணிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துமிக்க பால் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை!!
Next post புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)