செம்மரங்களை கேரளா வழியாக அந்தமானுக்கு கடத்தல்: கேரள வியாபாரியை பிடிக்க தீவிரம்!!

Read Time:3 Minute, 0 Second

8f2dd588-88a4-45fc-84dd-f0f3fa5c9f68_S_secvpfசெம்மரக் கடத்தல் வழக்கில் நடந்த விசாரணையில் அலமேலுமங்காபுரத்தை தம்பதி நாகேந்திரன்–ஜோதி லட்சுமி ஆகியோர் முதலில் கைதானார்கள்.

இவர்கள் பல வருடங்களாக செம்மர கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளனர். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளனர். அதில் பல லட்சம் மதிப்புள்ள 6 சொகுசு கார்களை வாங்கியுள்ளனர்.

அந்த சொகுசு கார்களில் அவர்கள் செம்மரங்களை கடத்தியுள்ளனர். இந்த கார்களில் ஏற்றப்படும் செம்மரங்கள் பள்ளி கொண்டா டோல்கேட், வாணியம்பாடி டோல்கேட், கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி டோல் கேட்டை தாண்டி செல்லும் தம்பதியின் கார் அரை மணி நேரத்தில் மீண்டும் கிருஷ்ணகிரி டோல் கேட், வாணியம்பாடி டோல்கேட், பள்ளிகொண்டா டோல் கேட் வழியாக திரும்பி வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி டோல் கேட்டை தாண்டியதும் வேறு வாகனத்தில் பெங்களூருக்கு செம்மரங்களை கடத்தி இப்படி தினந்தோறும் 4 முறை கார்களில் செம்மரம் கடத்தப்பட்டது.

கடந்த 16–ந் தேதி 2 முறையும், 27–ந் தேதி 4 முறையும் தம்பதிக்கு சொந்தமான கார் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி டோல்கேட்டை கடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

தம்பதி நாகேந்திரன், ஜோதி லட்சுமி மற்றும் சின்னபையன், சின்ன பையனை கொலை செய்த பெருமாள், வெங்டேசன், சத்தியமூர்த்தி, தங்கராஜ் ஆகியோர் செம்மரங்களை பெங்களூரில் இருக்கும் பாபுபாய் என்பவரிடம் 10 டன் வரை செம்மரம் விற்பனை செய்துள்ளனர்.

அந்த செம்மரங்கள் அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு கடல் வழியாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு டி.எஸ்.பி. தங்க வேலு மற்றும் 4 போலீசார் உடைந்தையாக இருந் துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த பாபுபாய் பெங்களூரில் தங்கி செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு?
Next post தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!