ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது!!

Read Time:2 Minute, 7 Second

7797d2fd-bbb9-4ffb-982f-d9ba97cee923_S_secvpfவிண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் மிகவும் உக்கிரமாகவே உள்ளது.

இந்நிலையில், இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு ஆந்திர மாநிலத்தில் மட்டும் கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று இரவு 8 மணிவரை 1636 பேர் பலியாகியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு 146 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 333 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 233 பேரும், கிழக்கு கோதாவரியில் 192 பேரும், விசாகப்பட்டினத்தில் 185 பேரும், விஜயநகரத்தில் 177 பேரும், நெல்லூரில் 166 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 78 பேரும், சித்தூரில் 64 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 60 பேரும், அனந்தபூரில் 56 பேரும், கடப்பாவில் 38 பேரும், கர்நூலில் 34 பேரும், மேற்கு கோதாவரியில் 23 பேரும் பலியாகியுள்ளனர் என ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் அனாதையாக கிடந்த 4 கிலோ தங்கம் ஐதராபாத்தில் சிக்கியது!!
Next post மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்!!