பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். 1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா, அவரது மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இறுதியில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டுவிட்டது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந் நிலையில் கொலை, சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாஷா, நவாப்கான், அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் அனைவரும் நீதிபதி உத்திராபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார்.
அப்போது அல்-உம்மா தலைவர் பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அல்-உம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி, தாஜூதின், முகம்மது அலிகான் குட்டி, முகமது பஷீர், உசீர், பாபு, ஜாகீர் உசேன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்
தண்டனை விவரம் வெளியிடப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் விடிய விடிய தீவிர வாகனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கோவை முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...