82 வயது முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களை பொருத்தும் அரிய வகை ஆபரேஷனை செய்த மருத்துவர்கள்!!

Read Time:2 Minute, 22 Second

221f6344-1141-4814-8e68-6493718499d2_S_secvpf‘ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ எனும் நோயால் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு முடங்கி இருந்த 82 வயது முதியவருக்கு அரிய வகை ஆபரேஷன் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

‘பேம்பூ ஸ்பைன்’ என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த நோய் தாக்கினால் முதுகுத்தண்டு இணைப்பில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படும். கழுத்தெலும்பு தொடங்கி முதுகுத்தண்டின் நுனி எலும்பு வரை உடைந்து போவது போல் வலிக்கும்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இப்ராஹிம் முல்லாஜி(83) நோயின் தாக்கத்தால் 2 கால்களும் முழுவதுமாக முடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் படுக்கையில் விழுந்தார்.

இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த மார்ச் மாதம் அவர் அழைத்து வரப்பட்டார். அவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே தீர்வு என்று தெரிவித்தனர். ஆனால் வழக்கமான அறுவை சிகிச்சையை 82 வயது முதியவரின் உடல் தாங்கிக் கொள்ளாதென்பதால், அறுவை சிகிச்சையின் போது சதைகளில் ஏற்படும் சேதத்தை வெகுவாக குறைக்கும் minimally invasive spine சர்ஜரியை மேற்கொண்டனர்.

மார்ச் மாத இறுதியில் நடத்தப்பட்ட இந்த அரிய ஆபரேஷனில் முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களைப் பொருத்தி அவரது நோயை குணமாக்கி மருத்துவர்கள் சாதனை புரிந்தனர். தற்போது யார் துணையும் இல்லாமல் வெளியே சென்று வரும் அளவிற்கு முதியவரின் உடல்நிலை முன்னேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றவாளிகளை ரகசியமாக தூக்கிலிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Next post ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி!!