குளச்சலில் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பிச்சை எடுத்து பணம் அனுப்பிய பெண்கள்!!

Read Time:1 Minute, 53 Second

d084628c-bfe5-4c9d-8b3e-2135fe5b78f3_S_secvpfகுளச்சல் பகுதியில் குளங்களை தூர்வார வேண்டும், அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் எடை குறைவாக கொடுப்பதை தடுக்க வேண்டும், நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த அமைப்பினர் குளச்சல் பகுதியின் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காவிட்டால், தாங்களே பிச்சை எடுத்து அதிகாரிகளுக்கு நிதி அனுப்புவோம் எனவும் கூறியிருந்தனர்.

அதன்படி இன்று இச்சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சுசீலா தலைமையில், நிர்வாகி அன்னம்மாள் முன்னிலையில் குளச்சல் பகுதியில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

இதில் வசூலான தொகையில் ரூ.115–ஐ மண்டல நுகர்பொருள் துறையின் மேலாளருக்கும், பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளருக்கு குளங்களை தூர்வாரும் பணிக்கு ரூ120–க்கும் பாங்கியில் பணம் கட்டி டி.டி. எடுத்து அதனை தபால் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக குளச்சல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!
Next post தாம்பரம் அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் மீது புகார்!!