ஒன்பது வயதில் 5000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன் 14 வயதில் விடுதலைக்காக காத்திருப்பு!!

Read Time:3 Minute, 42 Second

d59b7735-3acd-4514-af62-ca8883e52851_S_secvpfமத்தியப்பிரதேச மாநிலம், ஹார்தா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது ஒன்பது வயதில் தந்தையால் 5000 ரூபாய் மற்றும் 600 கிலோ கோதுமைக்கு அடமானம் வைக்கப்பட்டான். இன்று 14 வயதாகும் நிலையில் குழந்தை தொழிலாளியாக உள்ள தனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் அவன் காத்திருக்கிறான்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் கன்ஹயா லால் பண்டாரியிடம் தனது 9 வயது மகன் சாந்தாராமை 5000 ரூபாய் மற்றும் 600 கிலோ கோதுமைக்கு அடமானம் வைத்தார் 55 வயது பகீரத். பிணை வைக்கப்பட்ட கூலியாளாக தனது மகனை அனுப்பி வைத்து 5 வருடங்களாகியும், இன்று வரை வாங்கிய கடன் 5000 ரூபாயை அடைக்க பணம் சம்பாதிக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னை அடிமையாக வைத்துள்ள பண்டாரியிடம் எப்போது நான் விடுதலை செய்யப்படுவேன் என்று சாந்தாராம் கேட்டுள்ளான். அப்போது அசல் 5000 ரூபாய் மற்றும் இதுவரை அசலுக்கான வட்டி ஆகியவற்றை சேர்த்து மிகப்பெரிய தொகையை அவன் செலுத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நாள்தோறும் 12 மணி நேரம் அவன் வேலை செய்வதால் ஆண்டு ஒன்றுக்கு 100 கிலோ கோதுமை அவனது குடும்பத்துக்கு கிடைக்கிறது. தான் கஷ்டப்பட்டாலும், தனது தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினராவது நன்றாக இருக்கிறார்களே என அவன் வேலை செய்து வந்தான்.

இவ்வாறு 5 ஆண்டுகளாக சாந்தாராம் கொத்தடிமையாக உள்ளது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் சாந்தாராமை பேட்டியெடுத்தனர். அப்போது எத்தனை வயது வரைதான், நான் வேலை செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் இறக்கும் வரை இங்கு வேலை செய்து கொண்டு இருக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகிறது என அவன் வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளான்.

இது குறித்து கந்துவட்டிக்காரர் பண்டாரியிடம் தனியார் தொலைக்காட்சி குழு கேள்வி கேட்டபோது அவர் பிளேட்டை அப்படியே திருப்பி போட்டார். அதாவது ரூ.5000-ஐ கடனாக பெற்றுக்கொண்டு தன்னிடம் ஒரு வருடம் மட்டுமே சாந்தாராம் வேலை பார்த்ததாகவும், நேற்று அவன் வேலையை விட்டு சென்றுவிட்டதாகவும் பண்டாரி கூறியுள்ளார். மேலும் தன்னுடன் வந்தால் சாந்தாராமின் வீட்டிற்கு சென்று இதை நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து விசாரித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த தொலைக்காட்சி செய்தியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!!
Next post திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்!!