12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்!!

Read Time:1 Minute, 56 Second

226dc0a3-90ac-447d-9d0e-ea67590d4d2f_S_secvpfபார்வையின்மை என்ற மிகப்பெரிய குறைபாட்டை பின்னுக்குத்தள்ளியதன் மூலம் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையிழந்த மாணவரான டபஸ் பரத்வாஜ்(18) தனது வகுப்புத் தோழர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்த டபஸ், உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த தேர்வை எழுதி 500-க்கு 457 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துவரும் இவர் சிறுவயது முதல் தனது குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் முழு ஊக்கத்துடன் படித்து வந்ததாகவும், லேப்டாப்பில் உரைநடை பாடங்களை குரல் வடிவமாக மாற்றும் மென்பொருளின் உதவியுடன் தினந்தோறும் 7-8 மனிநேரம் டபஸ் தொடர்ந்து படித்து வந்ததாகவும் அவரது அண்ணன் கூறினார்.

ஆங்கிலத்தில் 95, உளவியலில் 90, சமூகவியலில் 95, சட்டப்படிப்பில் 94, கணித அறிவியலில் 83 மற்றும் கூடுதல் பாடமாக இந்துஸ்தானி இசையின் வாய்ப்பாட்டு பிரிவில் 92 மதிப்பெண்களை பெற்றுள்ள இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் 2015-ம் ஆண்டுக்கான சட்டக்கல்வி பொதுநுழைவு தேர்வில் பங்கேற்று 35-வது ரேங்க் எடுத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!
Next post உடற்பயிற்சி கூடத்தில் தவறி விழுந்தார்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு!!