திருமணம் இன்று நடக்கயிருந்த நிலையில் மணமகள் காதலனுடன் ஓட்டம்!!

Read Time:1 Minute, 34 Second

1ddacd67-452a-4f63-9426-4779c3e752b8_S_secvpfகண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 22). இவருக்கும் கல்வாசல் கிராமத்தை சேர்ந்த விஜி (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விஜி பால் கொசைட்டியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. நேற்று மாலை மணமக்கள் அழைப்பு நடந்தது. அப்போது மணமகள் சுமித்ரா மாயமானதை கண்டு இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.

படவேட்டை சேர்ந்த சரவணன் (வயது 25) என்ற விவசாயியை சுமித்ரா காதலித்து வந்தது தெரியவந்தது. காதலனுடன் சுமித்ரா வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது.

மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்றது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் விஜி மற்றும் அவரது உறவினர்கள் 20–க்கும் மேற்பட்டோர் மணமகளின் காதலன் சரவணன் வீட்டை சூறையாடினர்.

பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சரவணனின் குடும்பத்தினர் சந்தவாசல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் ஜிம் பயிற்சியாளர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!
Next post வழக்கில் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: பவானி கோர்ட்டு உத்தரவு!!